பாறுக் ஷிஹான் யாழ்ப்பாண மருத்துவபீடத்தின் 40 ஆவது நிறைவுதினத்தினை முன்னிட்டு யாழ் மருத்துவ பீடமும், வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடா...
பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாண மருத்துவபீடத்தின் 40 ஆவது நிறைவுதினத்தினை முன்னிட்டு யாழ் மருத்துவ பீடமும், வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்தும் மாபெரும் மருத்துவக் கண்காட்சி நேற்று (04) யாழ்.மருத்துவபீட வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, உள்நாட்டு, வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் இவலூஷன் பிறைவட் லிமிடட்டின் பங்களிப்புடன் யை ஏற்பாடு செய்துள்ளனர். ;.
இதனை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்தார். எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பார்வையிட முடியும்.
கண்காட்சியில் அடிப்படை விஞ்ஞானம், மருத்துவத்துறையின் நவீன முன்னேற்றங்கள், சுகாதாரத் தொழில்வாய்ப்புக்கள், நிகழ்கால சுகாதார சவால்கள், சிறுவர் அரோக்கியம், யௌவன பருவ ஆரோக்கியம், வயது வந்தோர் சுகாதாரம், முதியோர் சுகாதாரம் ஆகிய விடயங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மேலும் துப்பாக்கிச்சூடு,பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றால் soco பொலிஸார் கண்டெக்கும் பொருட்கள் பரிசோதனை செய்வது பற்றிய பரிசோதனை கருவிகள் என்பன இடம்பிடித்துள்ளன.