முல்லைத்தீவு – அம்பாள்புரம், ஆறாம்கட்டை ஆகிய பகுதிகளுக்கான உரிய போக்குவரத்து வசதிகள் இன்றியும், பாதைகள் புனரமைக்கப்படாமையினாலும் தாம் பாரிய ...
முல்லைத்தீவு – அம்பாள்புரம், ஆறாம்கட்டை ஆகிய பகுதிகளுக்கான உரிய போக்குவரத்து வசதிகள் இன்றியும், பாதைகள் புனரமைக்கப்படாமையினாலும் தாம் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்குவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 45 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காலையிலும், மாலையிலுமாக 18 கிலோமிற்றர் தூரம் கால்நடையாக பாடசாலைக்கு செல்கின்ற பரிதாபகரான நிலை காணப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயளாலர் பிரிவிற்குட்பட்ட அம்பாள்புரம், ஆறாம்கட்டை, மற்றும் கொல்லவிளாங்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பாடசாலை ஆரம்ப பாடசாலையாக காணப்படுவதனால், தரம் ஐந்திற்கு மேற்பட்ட வகுப்புக்களில் கல்வி கற்கும் சுமார் 45 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்பது கிலோமீற்றர் தொலைவில் உள்ள வன்னிவிளாங்குளம் மற்றும் 15 கிலோமீற்றர் தொலைவில் மாங்குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடாசலைகளில் தமது கல்வியை தொடர்கின்றனர்.
மேற்படி மாணவர்களின் போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மட்டத்தில் பிரதேச மக்களால் தெரியப்படுத்தப்பட்ட போதும், இப்பிரச்சினைக்கான தீர்வேதும் கிடைக்கப்பெறவில்லை.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த மாணவர்களின் நிலைமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து, ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனாவினால் உடனடியாக இந்த மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.
இருப்பினும் சேவை மேற்கொள்ளப்பட்டு வந்த போதும், கடந்த சில மாதங்களாக இப்போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டதால், இந்த மாணவர்கள் இவ்வாறு நாள் ஒன்றுக்கு 18 கிலோமீற்றர் தூரம் கால்நடையாக சென்று கல்வி கற்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே தமக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.