பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சி. சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரி...
பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சி. சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வைத்தியர் சி. சிவரூபன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
கைதான வைத்தியரின் விடுதலையை வலியுறுத்தியும், பதில் வைத்தியரை நியமிக்க கோரியும் மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டனர். பச்சிலைபள்ளி பிரதேசசபை தவிசாளர் சு.சுரேனும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது.

