யாழ்ப்பாணம் அராலிக்கு அண்மையாக தனியார் காணியில் முஸ்லிம் வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுதிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் பிரதமர் ரணில் ...
யாழ்ப்பாணம் அராலிக்கு அண்மையாக தனியார் காணியில் முஸ்லிம் வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுதிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தபோது, இதற்கான அனுமதியளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களிற்கு தொடர்மாடி குடியிருப்பு அமைக்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் முயற்சிப்பது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் யாழ்ப்பாணம் வந்தபோது கலந்துரையாடல் நடந்தது. அதை தமிழ்பக்கம் அம்பலப்படுத்தியிருந்தது.
தொடர்மாடி அமைப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட காணி தொடர்பான சர்ச்சை நிலவுவதாகவும், காணியில் வண்ணார்பண்ணை சிவன் கோயில் நிர்வாகமும் உரிமை கோருவதாகவும் தெரிவித்திருந்தோம். இதையடுத்து, சிவன் கோவில் காணியில் முஸ்லிம் குடியேற்றம் என இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், காணியை சட்டபூர்வமாக உறுதிசெய்யும் ஆவணங்கள் எதையும் கோவில் நிர்வாகம் இதுவரை சமர்ப்பிக்கவில்லையென தொடர்புடைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சட்டத்தரணியொருவரே அது தனது காணியென, யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் தத்துவம் முடித்து, உரிமையாளராக இருந்தார். அவரிடமே முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் காணியை கொள்வனவு செய்திருந்தார்.
அந்த காணியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க, கடந்த ஏப்ரலில் ரணில் யாழ்ப்பாணம் வந்தபோது, முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தநிலையில், கடந்தவாரம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி கூட்டத்தில், இந்த விவகாரத்தை ரணில் விக்கிரமசிங்கவே ஆரம்பித்து வைத்தார்.
இதேவேளை, இந்த கூட்டத்திற்கு முதல்நாட்களிலேயே யாழ்ப்பாணம் வந்து தங்கிய ரிசாத் பதியுதீன், அந்த நிலத்தில் தொடர்மாடி அமைக்க அனுமதிக்கும்படி தொடர்புடைய அதிகாரிகள் பலரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. 500 வீடுகளை கொண்ட தொடர்மாடி அமைக்கவுள்ளதாக ரிசாத் குறிப்பிட்டுள்ளார். யாழ் முதல்வரும் திட்டத்திற்கு பூரண ஆதரவாக உள்ளார் என்றே அதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்டது.
எனினும், தொடர்மாடி அமைக்க அனுமதிக்க முடியாது என்பதை அதிகாரிகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். அங்கு, குடிநீர் விநியோக வசதியில்லாததையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதன்பின்னரே, அபிவிருத்தி கூட்டத்தில் விடயம் கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தின் பின், அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் வீட்டுத்திட்டத்திற்கு அனுமதியளிக்க கோரப்பட்டுள்ளது. இதன்படி, தொடர்மாடி அல்லாமல், g+1 என்ற இரண்டு வீடுகள் இணைந்த, மேலடுக்கு வீடுகளை நிர்மாணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒரு g+1 கட்டடம் 25 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு கட்டடத்திலும் இரண்டு குடும்பங்கள் வாழும். 6 பேர்ச் காணியில் ஒவ்வொரு வீடும் அமையவுள்ளது. சுமார் 150 g+1 கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், குடியிருப்பிற்குள் பாதை உள்ளிட்ட இதர வசதிகளிற்காக நிலம் ஒதுக்கும்போது, இதைவிட குறைந்த வீடுகளே அமைக்கலாமென அதிகாரிகள் குறிப்பிட்டனர்.