இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் புதுடில்லி வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக அரசியல் தலைவர் வைகோ புதுடில்லிப் பொலிஸாரால்...
இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் புதுடில்லி வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக அரசியல் தலைவர் வைகோ புதுடில்லிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது முதாவது வெளிநாட்டுப் பயணமாக இன்று நண்பகல் புதுடில்லி பயணமானார். இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் 3 நாள்கள் அரசமுறைப் பயணமாக கோத்தாபய ராஜபக்ச இன்று பிற்பகல் புதுடில்லியைச் சென்றடைவார்.
தனது இந்திய பயணத்தின் போது, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கோத்தாபய ராஜபக்ச முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனிடையே கோத்தபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுடில்லியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுடில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் திரண்ட மதிமுகவினர் கோத்தாபய ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை புதுடில்லி பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.