கடந்த ஐ.தே.க அரசாங்கத்தின் போது கையெழுத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் மறுஆய்வு செய்யவும், அவை அரசியலமைப்பை மீறினால் மீண்டும் பேச்சுவார...
கடந்த ஐ.தே.க அரசாங்கத்தின் போது கையெழுத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் மறுஆய்வு செய்யவும், அவை அரசியலமைப்பை மீறினால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹம்பாந்தோட்ட, மிர்ரிஜிவெல எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் இதில் முக்கியமானது. இது முன்னாள் அரசாங்கம் சிங்கப்பூரின் பதிவு செய்யப்பட்ட ‘சில்வர் பார்க் இன்டர்நஷனல்’ நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமாகும்.
முந்தைய அரசாங்கம் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் கீழ் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், இலங்கைக்கு சாதகமாக இல்லாத ஒப்பந்தங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த அரசாங்கம் இந்த ஒப்பந்தங்களில் பெரும்பாலானவற்றை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் கையெழுத்திட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி, இந்திய பாதுகாப்பு இதழான “பாரத் சக்தி” உடனான தனது முதல் வெளிநாட்டு நேர்காணலில், ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை 99 வருடங்களிற்கு சீனாவிற்கு வழங்கும் ஒப்பந்தம் தவறானது என தெரிவித்திருந்தார்.
வணிக பயன்பாட்டிற்காக துறைமுகத்தில் சீனர்களுக்கு ஒரு முனையத்தை வழங்குவதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று ஜனாதிபதி கூறினார்.


