மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து யாசகர்களையும் அகற்றுமாறு மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஹம்பாந்தோட்...
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து யாசகர்களையும் அகற்றுமாறு மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஹம்பாந்தோட்ட ரிதியாகமவிலுள்ள யாசகர்களிற்கான மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
பதில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைவாக, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்த்தனவினால் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சகல பொலிஸ் நிலைய பகுதிகளிலுமுள்ள யாசகர்கள் உடனடியாக பொலிசாரால் அகற்றப்பட்டு, யாசகர் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பபடவுள்ளனர்.
அதேவேளை, புகையிரதத்தில் யாசகம் பெற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முன்னரும் அமுலில் இருந்தபோதும், முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இனிமேல் இது இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சீ.பி.இரத்நாயக்க தெரிவித்துள்ளார்.