இரு திணைக்களங்களின் கவனஈனத்தால் ஆயிரத்து 200 மாணவர்கள் ஆண்டாண்டு காலமாக வெள்ளத்தில் மிதப்பது தொடர்பில் எவருமே கண்டுகொள்ளவில்லை என கிளிநொச்சி...
இரு திணைக்களங்களின் கவனஈனத்தால் ஆயிரத்து 200 மாணவர்கள் ஆண்டாண்டு காலமாக வெள்ளத்தில் மிதப்பது தொடர்பில் எவருமே கண்டுகொள்ளவில்லை என கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் அதிபர் கி.விக்னராயா கவலை தெரிவிக்கின்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப் பெரும் பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆயிரத்து 200 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் . இவ்வாறு கானப்படும் முக்கிய பாடசாலையின் அருகே ஓர் பிரதான நீர் வாய்க்கால் கானப்படுகின்றது. அவ்வாறு கானப்படும் வாய்க்காலில் வழிந்தோடும் நீரானது அதிக வரத்து ஏற்படும் சமயம் அவை உடனடியாகவே பாடசாலை வளாகத்திற்குள் உட் புகுந்து ஒரு முழம் வெள்ளம் தேங்கி நிற்கின்றது.
இவ்வாறு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஏற்படுவது தொடர்பில் நீர்ப்பாசணத் திணைக்களத்திற்கு தகவல் வழங்கி அதனை உடன் சீர் செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம் . அவ்வாறு பாடசாலைக்குள் நீர் புகுவதற்கு நீர்ப்பாசணத் திணைக்களத்தின் தவறு கிடையாது அது வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் அப் பகுதியில் அமைத்துள்ள மதகு போதிய வசதி இன்மை காரணமாக வேகமாக வரும் நீர் அதே வேகத்தில் செல்ல முடியாத காரணத்தினால் பாடசாலைக்குள் உட்புகுவதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதன்போது வீதி அபிவிருத்திப் பணியின்போது போதிய வசதி ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் அந்த வசதி போதாமை எனக் கண்டனிந்தாள் அதனை அமைக்கும்போதே தெரியப்படுத்தியிருப்பின் மாற்றம் செய்திருக்க முடியும் . இதற்குமேல் மாற்றத்தை ஏற்படுத்துவதானால் நீர்ப்பாசணத் திணைக்களத்தின் செலவில் மேற்கொள்ள முடியும் என்கின்றனர்.
இவ்வாறு இரு திணைக்களங்களும் ஆயிரத்து 200 மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணி தொடர்பில் எந்தவிதமான பொறுப்பற்ற தனத்தாளும் போதிய திட்டமிடலும் இன்றி பணியை ஆரம்பித்த காரணத்தால் மாணவரகள் தினமும் காலில் அணிந்துவரும் பாத அணிகளை பாடசாலை விட்டுச் செல்லும் சமயம் கையில் அணிந்து செல்கின்றனர். அத்தோடு அதிக குளிர் காரணமாக நோய் தொற்றிற்கும் இலக்காகின்றனர். இதனைப் பொறுக்க முடியாத நிலமைநிலேயே இன்று ஊடகம் வழியாக எடுத்துச் செல்லும் நிலமை ஏற்பட்டுள்ளது. என்றார்.
குறித்த விடயம் தொடர்பில் இரணைமடு நீர்ப்பாசணப் பொறியியலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
குறித்த விடயம் தொடர்பில் உடன் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்படும் . அதன் மூலம் ஓர் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டப் பொறியியலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எழுத்தில் எனது கவனத்மிற்கு கொண்டுவரப்பட்டது கிடையாது . அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டால் ஆராயப்படும். என்றார்.