யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2019ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் 99 வழக்குகள் தாக்கல் செய்யப்...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2019ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் 99 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 6 லட்சத்து 60 ஆயி்ம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையினை விடவும் 2019ஆம் ஆண்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் தாக்கல் செய்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகவே கானப்படுகின்றது. இதன் பிரகாரம் 2018ஆம் ஆண்டில் குறித்த திணைக்களமானது குடாநாடு முழுமையாக 71 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது 52 படகுகள் கைது செய்யப்பட்டிருந்தன. இதன்போது 174 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவற்றின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்த 71 வழக்குகளின்போதும் நீதி மன்றங்கள் 10 லட்சத்து 51 ஆயிரம் ரூபா குற்றப் பணம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு 31 படகுகள் கைது செய்யப்பட்ட நிலையில் 28 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்போது 97 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இதுவரை 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.