பெரும் பரபரப்பிற்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டமொன்று...
பெரும் பரபரப்பிற்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டமொன்று இன்று (15) இடம்பெற்றது.
அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
இதேவேளை ரெலோவின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா தலைமையிலான உறுப்பினர்கள் அக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளனர்.
இதனால் கட்சிக்குள் பெரும் குழப்பமும் பிளவும் ஏற்பட்டிருக்கும் நிலையில் கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நாவலர் மண்டபத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்று வருகின்ற அதே நேரத்தில் நல்லூரில் சிறிகாந்த் தலைமையிலான கூட்டமொன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.