இன்னும் இரு வாரங்களில் புதிய அரசியல் இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று சட்டத்தரணியும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் பொதுச் ...
இன்னும் இரு வாரங்களில் புதிய அரசியல் இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று சட்டத்தரணியும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் பொதுச் செயலருமான ந.சிறிகாந்தா கூறினார்.
திங்கட்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த சிறிலங்கா அதிபர் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற முடிவை அறிவித்த 4 நாட்களின் பின்னர், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்தது என்று சுட்டிக்காட்டிய சிறிகாந்தா, அந்த முடிவைத் தாங்கள் ஆதரிவிக்கவில்லை என்றார்.
இரு பிரதான அதிபர் வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச ஆகியோரை நாம் ஆதரிக்க முடியாது என்பதற்குப் பல காரணங்களை தலைமைக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியபோதும் பெரும்பான்மை அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது என்று கூறிய சிறிகாந்தா, பிரதான வேட்பாளர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றார்.
தமிழ் மக்களின் சார்பாக உருவாக்கப்பட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ் கட்சிகள் உடன்பட்ட 13 கோரிக்கைகள் கொண்ட ஆவணத்தைத் தொட்டுப் பார்க்கக் கூட பிரதான வேட்பாளர்கள் மறுத்திருந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தது ஏற்கத்தக்கது அல்ல என்று சிறிகாந்தா குறிப்பிட்டார்.
நாமும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணக் கிளையும் இந்த விடயத்தை ஆராய்ந்தோம் என்று கூறிய சிறிகாந்தா, இறுதியில் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்தோம் என்றார்.
அரச தலைவர் தேர்தல் நெருங்கியிருந்த நிலையில் எமக்கு குறுகிய காலம் இருந்தது. அதில் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாக நாங்கள் பரப்புரைகளை நடத்தினோம் என்றார் சிறிகாந்தா.
இந்த முடிவுக்காக தமிழீழ விடுதலை இயக்கம் எம்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தபோதும், அது தொடர்பாக கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை என்று கூறிய சிறிகாந்தா, தமிழரசுக் கட்சியின் எடுபிடியாகவே தமிழீழ விடுதலை இயக்கம் நீடித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் நாங்கள் அந்தக் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டிருக்க முடியாது என்று உணர்ந்தோம் என்று கூறினார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் கிளையின் 80 வீதமான உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியே வர உள்ளனர் என்று குறிப்பிட்ட சிறிகாந்தா, 20 வீதமானவர்கள் தங்களுடன் இதயபூர்வமான இணைந்துள்ளனர் என்றார்.
20 வீதமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் சேவையில் உள்ளதால் அவர்களை இந்த முடிவுடன் சம்பந்தப்படுத்தவில்லை என்ற சிறிகாந்தா, மக்கள் சேவைகள் தடைப்படக் கூடாது என்ற அடிப்படையில் இந்த முடிவைக் கொண்டிருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
எங்கள் இந்த முடிவுக்கு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களில் ஆதரவு உண்டு, வடக்கு, கிழக்குக்கு வெளியேயும் ஆதரவு கிடைத்துள்ளது என்று கூறிய சிறிகாந்தா, வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் போராளிகள், தற்போதைய உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.
இன்னும் இரண்டு வாரங்களில் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அபிலாசைகளுக்காகப் போராட, வாதாட ஜனநாயக அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் என்று கூறிய அவர், அதற்கான ஆதரவை மக்களிடம் கோருவோம் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கிளையாக, தமிழ் மக்களின் அபிலாசைகளை மழுங்கடிக்கும் வகையில் செயற்படும் தமிழரசுக் கட்சியை எங்கே அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்புவதற்காக ஏனையோரையும் ஒரணியில் திரட்டி நேர்மையான – சுயநலமற்ற அரசியல் தலைமை உருவாக்கப்படும் என்று கூறிய சிறிகாந்தா, அதில் எமது வகிபாகத்தை உறுதியுடன் நிறைவேற்றத் தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.
இரு வாரங்களில் புதிய அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்படும்போது அதன் கொள்கைத் திட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக அறிவிப்போம் என்றார் சிறிகாந்தா.
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராகப் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வேண்டும், தமிழர் நலனுக்கு எதிரானவர் என்று கூறிய இலங்கைத் தமிழரசுக் கட்சி, அவர் சிறிலங்கா அதிபரானதும் இணைந்து பயணிக்கத் தயார் என்று வெட்கம் இன்றி – கூச்ச நாச்சம் இன்றி கூறுகின்றது என்று குறிப்பிட்ட சிறிகாந்தா, தமிழ் மக்களுக்கு அந்தக் கட்சி தவறான தலைமையை வழங்குகின்றது என்றார்.
இலங்கைத் தீவுக்குள்ளே தமிழினம் தமது சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தனது தாயத்தில் சுயாட்சி, அரசியல், நிர்வாக ஏற்பாடுகளுடன் இணைப்பாட்சி வழிமுறை ஏற்படுத்துவதற்கும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தீவில் வாழும் மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் நாம் அமைக்கவுள்ள இந்தப் புதிய அரசியல் கட்சி ஜனநாயக ரீதியில் தன்னால் இயன்றவரை செயலாற்றும் என்றும் சிறிகாந்தா குறிப்பிட்டார்.