பிரதமராக பதவிவகிக்க சட்டம் அனுமதித்தபோதும், கட்சியிலுள்ள சிலரது வற்புறுத்தலாலேயே ரணில் பதவி விலக வேண்டியேற்பட்டது என தெரிவித்துள்ளார் முன்னா...
பிரதமராக பதவிவகிக்க சட்டம் அனுமதித்தபோதும், கட்சியிலுள்ள சிலரது வற்புறுத்தலாலேயே ரணில் பதவி விலக வேண்டியேற்பட்டது என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன.
காலியில் நடந்த கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

“எங்களை ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் பல விசயங்களை சொல்லாமல் இருக்கிறோம். நாங்கள் வாய் திறந்தால் பல விடயங்கள் வெளி வருமென கட்சியின் உறுப்பினர்களிற்கு நினைவூட்டுகிறோம்.
சிலரது முட்டாள்த்தனமாக யோசனையாலேயே நாம் அரசாங்கத்தை இழந்தோம். 19வது திருத்தத்தின்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மார்ச் மாதம் வரை பதவியில் இருக்க முடியும். ஆனால் கட்சியின் ஒரு பகுதியினர் அதை எதிர்த்தார்கள்.
அலரி மாளிகை ஐ.தே.க உறுப்பினர்களிற்கு உயிர் கொடுக்காது. நான் எதிர்மறையான விஷயங்களைச் சொல்லவில்லை, ஆனால் நாங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை எங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நினைவூட்ட வேண்டும்.
ரணிலின் இருப்பு வேறு யாருடைய தலைமைக்கும் தடையாக இருக்காது. இந்த கட்சியில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த கட்சியின் தலைவர்களை நசுக்கவோ அழிக்கவோ கூடாது. சிலர் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு சஜித்தை பயன்படுத்துகிறார்கள்.“ என்றார்.