ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியைத் தொடர்ந்து தென்னிலங்கை உட்பட நாடு முழுவதிலும் வரையப்படுகின்ற வீதிச் சுவர் சித்திரங்கள் தமிழ் மக்களுக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியைத் தொடர்ந்து தென்னிலங்கை உட்பட நாடு முழுவதிலும் வரையப்படுகின்ற வீதிச் சுவர் சித்திரங்கள் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் வழங்கக்கூடிய வகையில் காணப்படுவதாக தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளால் தாம் ஜனாதிபதியாக தெரிவாகியதாக வெளிப்படையாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தமையே சில இனவாத சுவர் சித்திரங்கள் வரையப்படுவதற்கு பிரதான காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த நவம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பௌத்த சிங்கள மக்களின் பெருவாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, துட்டகைமுனு அரசனின் நினைவுத் தூபி அமைந்துள்ள அநுராதபுரம் ருவன்செலிசேய விகாரையில் வைத்து கடந்த மாதம் 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், தாம் பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரமே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாகவும் அதற்காக வாக்களித்த பௌத்த சிங்கள மக்களுக்கு நன்றி கூறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் மக்களிடம் இருந்து கனிசமான வாக்குகளை தாம் எதிர்பார்த்ததாக குறிப்பிட்டிருந்த அவர், எனினும் எதிர்பார்த்த அளவு வாக்குகளை தமிழ் மக்கள் வழங்காவிட்டாலும் அவர்களுக்கும் தாமே ஜனாதிபதி எனவும் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த அறிவிப்பை அடுத்து அவரது சில அதிரடி தீர்மானங்களைத் தொடர்ந்து தென்னிலங்கை மட்டுமன்றி பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள சுவர்களுக்கு நிறந்தீட்ட ஆரம்பித்த இளைஞர்கள், அதில் சுவர்ச் சித்திரங்களை வரைய ஆரம்பித்தனர்.
குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்களைப் பார்த்து கழுத்தை அறுப்பதாக சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டை எதிர்கொண்ட பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு செயற்பாட்டிற்குப் பொறுப்பான முன்னாள் அதிகாரி பிரிகேடியர் பிரியந்த பெர்ணான்டோவின் அந்த சைகையை சுவர் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளது.
இவ்வாறான சுவர் சித்திரங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்திருப்பதாக எமது செய்திப் பிரிவுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.