ஆயுதப்படைகளுக்கு கிடைக்க வேண்டிய உரிய கௌரவத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெர...
ஆயுதப்படைகளுக்கு கிடைக்க வேண்டிய உரிய கௌரவத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணிப்பாளர் வித்தியாலயத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், விடுதலை புலிகள் அமைப்பை தோற்கடித்து பெற்ற வெற்றியின் 10 ஆவது வருட பூர்த்தியை கொண்டாட நாட்கள் எஞ்சியிருந்த நிலையில் இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்பால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆசியாவின் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாடு மிகச் தீவாகும்.
ஆனால் இங்கு எதுவும் சிறிய அளவில் இடம்பெறுவதில்லை.
1980 ஆம் ஆண்டுகளில் வடக்கில் அதேபோல் தெற்கில் இடம்பெற்ற ஆயுத கலவரத்தினால் நாம் உலகளவில் கடுமையான முரண்பாடான பூமியாக கருதப்பட்டோம்.
அதன் பின்னர் நிலத்திலும், கடல் பகுதியிலும் மற்றும் ஆகாய மார்க்கமாகவும் தாக்குதலை நடத்தக்கூடிய பலம் படைந்த கொடுர பயங்கரவாத அமைப்பு நாட்டில் இயங்கியது.
அதன் பின்னர் ஆசியாவில் பெருமளவான சிவிலியன்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இந்த வருடத்தில் நடத்தப்பட்டது.
நாடு சிறியதாக காணப்பட்டாலும் எமக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ள சவால்கள் சிறியவை அல்ல.
2008 ஆம் ஆண்டு மும்பையில் இடம்பெற்ற தாக்குதலுடன் இந்திய பிரஜை ஒருவர் தொடர்புபட்டிருக்கவில்லை.
ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து தீவிரவாதிகளும் இலங்கையர்கள்.
இந்த அச்சுறுத்தல் எமது நாட்டுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தபட்டதல்ல.
மாறாக இது அனைத்து வலய நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ஆகவே நாடுகளின் தனித்துவத்திற்கு அச்சுறுத்தலாகியுள்ள இந்த தீpரவாதத்தை ஒழிக்க வேண்டும்.
அண்டை நாடுகள் அனைத்தும் இந்த பயங்கரவாதம் தொடர்பில் நன்கு அறிந்துள்ளதால் அவர்களின் ஒத்துழைப்பையும் இதற்கு பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் துரதிஸ்டவசமாக கடந்த காலங்களில் நாட்டின் புலனாய்வு துறை செயழிலந்து காணப்பட்டது.
விடுதலை புலிகளுக்கு எதிராக போராடிய ஆயுத படைகளை அவர்கள் பழிவாங்கினர்.
ஆயுதபடைகள் என்பவர்கள் நாட்டின் பாதுகாவலர்கள்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது அரசாங்கம் முடிவுக்கு வந்ததன் பின்னர் நாட்டை ஒரு சர்வதேச ரீதியிலான வேறு பயங்கரவாதம் ஆக்கிரமித்தது.
நாட்டில் பெரும்பான்மை மக்களை நசுக்கி யுத்தத்தால் செய்துக்கொள்ள முடியாமல் போனதை நிறைவேற்றிக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளை கடந்த காலங்களில் கண்டோம்.
கடந்த அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சென்று வெளிநாட்டு நீதிபதிகளுக்கு நாட்டில் விசாரணைகளை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்கியது.
அதற்கமைய இராணுவத்தினருக்கு எதிராக யுத்த குற்ற நீதிமன்றம் ஒன்றை அமைக்கவும் அவர்கள் உறுதியளித்ததோடு இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றியதையும் நாம் கண்டோம்.
அவ்வாறு 5 வருடங்களில் நிகழ்ந்தவற்றை சரி செய்வதற்கான மக்கள் ஆணையை கடந்த தேர்தலின் போது மக்கள் வழங்கினர். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயுதப்படைகள் அனுபவித்த அநீதி, மற்றும் அவமானத்தை சரிசெய்யவும் தேவையானவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கின்றேன்.
அத்துடன் ஆயுதப்படைகளுக்கு கிடைக்க வேண்டிய உரிய கௌரவத்தை சர்வதேச மட்டத்தில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்´