தம்மை வெள்ளைவான் சாரதி என அடையாளப்படுத்தி ஊடக சந்திப்பை நடத்திய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நாளை மறுதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்...
தம்மை வெள்ளைவான் சாரதி என அடையாளப்படுத்தி ஊடக சந்திப்பை நடத்திய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நாளை மறுதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர்கள் நேற்று இரவு வத்தளை – மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களை 72 மணிநேரம் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய சி.ஐ.டியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன், கடந்த நவம்பர் 11ம் திகதி இந்த இரண்டு சந்தேக நபர்களும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே வெள்ளைவான் கடத்தல்களுக்கு கட்டளையிட்டார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
இது குறித்து அதிரடி விசாரணையை தொடங்கிய குற்றப்புலனாய்வு பிரிவு தற்போது சந்தேக நபர்களை கைது செய்துள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.