ஆந்திராவில் மனைவியின் கை, கால்களை கட்டி நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து...
ஆந்திராவில் மனைவியின் கை, கால்களை கட்டி நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். 
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரியைச் சேர்ந்தவர் மல்லேஷ். இவர் தினந்தோறும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.இரண்டு தினங்களுக்கு முன்பு தனது நண்பர் விஜயகுமாருடன் மது அருந்திய மல்லேஷ், அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.வீட்டில் தனிமையில் இருந்த மனைவியை கை, கால்களை கட்டி கணவனே தனது நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது தாயார் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக மல்லேஷ் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்