நாடு முழுவதும் பேராபத்தாக உருவெடுத்துள்ள சட்டவிரோத மணல் கொள்ளை யாராலும் கட்டுப்படுத்த முடியாததாக விஸ்பரூபம் எடுத்துள்ளது. மணல் கொள்ளையர்களால...
நாடு முழுவதும் பேராபத்தாக உருவெடுத்துள்ள சட்டவிரோத மணல் கொள்ளை யாராலும் கட்டுப்படுத்த முடியாததாக விஸ்பரூபம் எடுத்துள்ளது. மணல் கொள்ளையர்களால் முல்லைத்தீவும் பேராபத்தை சந்தித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ளா முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு நகர பகுதி கரையோரங்களில் சட்டவிரோத மண் அகழ்வு கொடிகட்டிப் பறக்கிறது. அடாவடியில் ஈடுபடும் மணல் மாபியாக்களை தம்மால் தட்டிக் கேட்க முடியவில்லையென்றும், அதிகாரிகள் மற்றும் பொலிசாரிடம் முறையிட்டும் பலனில்லையென்றும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கரையோரமாக இடம்பெறும் அளவு கணக்கில்லாத மண் அகழ்வால் பெரிய கால்வாய்கள் போன்று உருவாகி வருகின்றன. கடல்நீர் நிலத்திற்கு வரும் நிலைமையை மணல் கடத்தல்காரர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
பொலிசாரும், அதிகாரிகளும் இன்றும் சிறிது நாட்கள் பாராமுகமாக இருந்தால், முல்லைத்தீவு மூழ்கி விடுமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.