அதிகார பகிர்வை விட தேசிய பாதுகாப்பு மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கே முன்னுரிமையளிக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...
அதிகார பகிர்வை விட தேசிய பாதுகாப்பு மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கே முன்னுரிமையளிக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் சமத்துவம் என்பவற்றை அடிப்படையாக கொண்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் தேவைப்பாடுகளுக்கமையவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் முடிந்து போன விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது இரண்டு தரப்பிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.
யுத்தத்திற்காக சென்ற பலர் இன்னும் மீள வீடு திரும்பாதுள்ளனர்.
எனவே அவர்களை உயிர் நீத்தவர்களாகவே கருத வேண்டியுள்ளது.
இதனிடையே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட உறுதி மொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்களுக்கு கட்டங் கட்டமாக தீர்வு பெற்று கொடுக்கப்படும்.
அதன் ஒரு கட்டமாக தற்போது நிவாரணங்களை வழங்கி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து தூதரக பெண் அலுவலகர் கடத்தப்படவில்லை எனவும் இந்த விடயம் தம்மை இலக்கு வைத்து முனனெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தம்மை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை.
சீ.சீ.டி.வி காணொளிகள், தொலைபேசி அழைப்புகளின் ஊடாக கிடைத்த தரவுகள் மற்றும் சாட்சிகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பெண் தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுவதோடு அவர் தொடர்பான விசாரணைகளுக்கு அவர் உரிய ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை.
எவ்வாறாயினும் சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தினால் இந்த விடயம் குறித்து முழுமையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.