கிளிநொச்சியில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றைய ...
கிளிநொச்சியில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றைய தினம் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தில் புதியகொலனி மாங்குளத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் - பிரபா என்னும் 37 வயதினையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கிளிநொச்சிக்கு சென்று மாங்குளம் நோக்கித் திரும்பிய சமயம் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டினை இழந்து மின் கம்பத்துடன் மோதிய நிலையில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இவ்வாறு சிகிச்சை பெற்றவரே நேற்றைய தினம் பரிதாபகரமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.