கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் மகாவம்ச செயலகம் என்ற அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை சிங்கள, பௌத்த வரலாற்றை கொண்ட...
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் மகாவம்ச செயலகம் என்ற அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிங்கள, பௌத்த வரலாற்றை கொண்ட நாடு என குறிப்பிடும் மகாவம்ச நூல் தொடர்பான இந்த செயலகம், கலாச்சார விவகார அமைச்சில் நேற்று முன்தினம் (9) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
செத்சிறிபாய கட்டடத்தின் இரண்டாம் பகுதியின் நான்காவது தளத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் உடனடியாக மகாவம்சத்தை தமிழ், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மகாவம்சத்தின் ஒன்று தொடக்கம் ஆறு வரையான பாகங்கள் தமிழிலும், மூன்று முதல் ஆறு வரையான பாகங்கள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்படவுள்ளது.
கி.மு 600 முதல் கி.பி 301 வரையிலான காலகட்டம் என குறிப்பிட்டு மகாநாம மகா தேரரால் மகாவம்சத்தின் தொகுதி ஒன்று எழுதப்பட்டது. கி.பி 301 மற்றும் 1815 க்கு இடையில் மூன்று தேரர்களால் இரண்டாம் தொகுதி எழுதப்பட்டது. கி.பி 1815 மற்றும் 1936 க்கு இடையிலான மூன்றாவது தொகுதியை யாகிரால பன்னானந்த தேரர் எழுதியுள்ளார். மேலும் 4, 5,6 தொகுதிகள் அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழுவால் நிறைவு செய்யப்பட்டன.
இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழ் மக்கள் தொடர்பில் மகாவம்சம் தவறான கருத்தை கொண்டுள்ளதாக, தமிழ் மக்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.