தமிழீழ விடுதலைக்காக போராட ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்களில் இரண்டு இயக்கங்கள்தான் இலங்கை அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தன. ஒன்று தமிழீழ விடுதலைப்...
தமிழீழ விடுதலைக்காக போராட ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்களில் இரண்டு இயக்கங்கள்தான் இலங்கை அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தன. ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள். மற்றையது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ). தமிழர்களிற்ன சாபக்கேடோ என்னவோ, இரண்டு இயக்கங்களிற்கிடையிலும் சகோதர படுகொலை ஏற்பட்டு விட்டது. இது மிகப்பெரிய துரதிஷ்டம். இரண்டு இயக்கங்களும் இணைந்திருந்தால், இன்று ஈழம் கிடைத்திருக்குமென நினைக்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் கிளையிலுள்ள ஒரு பகுதியினர் பிரிந்து சென்ற பின்னர், இன்று (15) ரெலோவின் யாழ் கிளை புனரமைக்கப்பட்டு, புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், விந்தன் கனகரட்ணம், சபா குகதாஸ், ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பிரிந்து சென்றவர்களால் ரெலோ பலவீனப்படாது. சிறிய சலசலப்பு இது. இந்த சிறிய விவகாரங்களினால் எமது கட்சி பலவீனப்படாது. சகோதரப் படுகொலைகளையும் கடந்து இன்று ரெலோ பலமாக நிற்கிறது. இதனால், இந்த பிரிவால் நாம் பலவீனப்பட மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியில் இன்று சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அது ஏற்பட்டுள்ளது. எமது கட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. ரெலோ பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தது. வெலிக்கடை சிறைச்சாலையில் எங்கள் தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

சகோதரப்படுகொலையை பார்த்து சிங்கள சமூகம் எம்மை பார்த்து எள்ளி நகையாடியது. அது அவர்களிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக போய் விட்டது. ஆனால், அதை கடந்தும் விடுதலைப் புலிகள் தமது பயணத்தை தொடர்ந்தார்கள்.
ரெலோ இல்லாமல் போய்விட்டது என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில், மீண்டும் தொடர்ச்சியாக அது செயற்பட்டு வருகிறது. முதலாவது எமது தலைவர்கள் கொல்லப்பட்டதாலும், பின்னர் சகோதரப் படுகொலையாலும் எமது செயற்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது உண்மை.
இதெல்லாம் நடந்த பின்னரும், தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க தமிழீழ விடுதலை இயக்கம்தான் முக்கிய முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு சாட்சியமாக நான் இருக்கிறேன்.
இன்று யாழ் மாவட்டத்தில் சிறிய சலசலப்பு. எமது கட்சியில் பலரை உருவாக்கி பெருமை அவருக்குள்ளது. ஆனால், சிறிய விடயங்களிற்காக, தமிழ் அரசு கட்சியுடன் போகக் கூடாது என்ற கொள்கையுடன் ஒரு கட்சி ஆரம்பிக்கப்படுகிறது. அந்த கொள்கையுடன் எமக்கு உடன்பாடில்லை.
இன்றைய நிலையில் ஐந்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்தால் 22 எம்.பிக்களை நாம் பெறலாம். அந்த ஒற்றுமைக்கான முயற்சியை நாம் ஆரம்பிப்போம்.
பல கட்சிகள் ஆரம்பிக்கும் போது, சிங்கள கட்சிகளின் ஆளுமை அதிகரிக்கும். தேசத்தில் தமிழர்களின் பூர்வீக வரலாற்றை சிதைக்கும் விதத்தில், போராட்டங்களை மழுங்கடிக்கும் விதமாக அமையுமென்பது, அரசியலில் பழுத்த அனுபவமுடைய சிறிகாந்தாவிற்கு ஏன் புரியவில்லை?
இந்த சிறிய விவகாரங்களினால் எமது கட்சி பலவீனப்படாது. சகோதரப் படுகொலைகளையும் கடந்து இன்று ரெலோ பலமாக நிற்கிறது. இதனால், இந்த பிரிவால் நாம் பலவீனப்பட மாட்டோம். சிறிகாந்தா அண்ணர் கட்சியை ஆரம்பிப்பது அவரது சொந்த விருப்பம். அதற்கு எதிராக நாம் கருத்து சொல்லவில்லை. ஆனால், இந்த நேரத்தில் எம்மை பலவீனப்படுத்தும் விதமாக, எம்மை பலர் விமர்சிக்கும் விதமாக நடப்பதுதான் எமக்கு வேதனையாக உள்ளது.
தமிழ் அரசுக்கட்சி சொல்வதற்கு எல்லாம் நாம் தலையாட்டுவதாக பிரிந்து சென்றவர்களும், இங்குள்ள சிலரும் சொல்கிறார்கள். நிச்சயமாக இல்லை. வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிப்பதில்லையென கட்சி முடிவெடுத்தது. ஆனால், வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதென கூட்டமைப்பு முடிவெடுத்தது. கட்சியின் முடிவின்படி நான் வாக்களிக்கவில்லை. இப்படி பல விடயங்களில் கருத்து சுதந்திரத்துடன் பேசி செயற்படுகிறோம். நாம் யாருக்கும் அடிமைச்சாசனம் எழுதி செயற்படவில்லை. அப்படி செயற்படாதென வெளிப்படையாக சொல்லிக் கொள்கிறோம்.
யாழில் பல பிரச்சனைகள் உள்ளன. மணற்கொள்ளை பெரிய பிரச்சனை. இங்கு நடக்கும் அநீதிகளை தேடிக்கண்டுபிடித்து, அதை தட்டிக் கேட்கும் செயற்பாடு, யாழ் மாவட்ட குழுவின் செயற்பாடாக அமையும். ஒவ்வொரு போராட்டத்தையும் நாம் முன்னின்று செயற்படுத்த வேண்டும்.
13வது திருத்தம் இயக்கங்களின் இரத்தத்தால் உருவானது. அது தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கை. இந்தியாவிற்கு சென்ற கோட்டாபய மோடிக்கு அது குறித்து வாக்களித்து விட்டு, பின்னர் பத்திரிகையொன்றிற்கு வேறுவிதமாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி வந்ததன் பின்னர் இராணுவத்தின் கைக்கு அதிகாரம் வந்துள்ளது. எந்த நேரமும் எதுவும் செய்வார்கள். மக்களை உசுப்பேற்றி, அடிவாங்க வைத்து விட்டு நாம் பேசாமலிருக்க முடியாது“ என்றார்.