பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்றைய தினமும் பல்வேறு வெளிநாட்டுத் தூதுவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்படி இலங்கைக்கான அவுஸ்திரேலிய...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்றைய தினமும் பல்வேறு வெளிநாட்டுத் தூதுவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்படி இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் ஹொலி பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று பகல் சந்தித்துக் கலந்துரையாடினார்.
புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு அவுஸ்திரேபிய பிரதமர் ஸ்கொட் மொரிஸனின் வாழ்த்துக் கடிதத்தையும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் இதன்போது கையளித்தார்.
இதனைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் இருநாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, உயர்கல்வி போன்ற துறைகள் பற்றி பேசப்பட்டன.
விசேடமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் குடிபெயரும் முயற்சிகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜுவார்னி எஸ்கிடல், பிரதமரை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறிப்பாக மீன் ஏற்றுமதி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சந்திப்பின் நிறைவில், இருதரப்பினரும் நினைவுச் சின்னங்களையும் பரிமாற்றிக்கொண்டனர்.