காணாமல் போனோருக்கான 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்காக விண்ணப்பித்த 712 பேரிற்கும் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவித்தபோதும...
காணாமல் போனோருக்கான 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்காக விண்ணப்பித்த 712 பேரிற்கும் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவித்தபோதும் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக ஏமாற்றப்படுகின்றோம் என கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக காணாமல்போனோருக்கான கொடுப்பனவிற்கு விண்ணப்பித்த உறவுகள் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
நாட்டில் காணாமல் போனவர்கள் பல ஆயிரம் பேர் உள்ள நிலையில் இவர்களின் குடும்பங்களிற்கு உதவுவதற்காக அரசு 2019ம் ஆண்டின் பாதீட்டில் நிதி ஒதுக்கியது . அவ்வாறு ஒதுக்கிய நிதியினை பெறுவதற்காகவே குறித்த விபரங்கள் கோரப்பட்ட நிலையில் இதுவரை 712பேர் பதிவு செய்திருந்தனர்.
இதேநேரம் குறித்த நிதியினைப் பெறுவதற்கு காணாமல் போனவர் என்ற சான்றிதழைச் சமர்ப்பித்தவர்களிற்கான கொடுப்பனவை வழங்கும் நோக்கில் தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டது. இதன் பிரகாரம் 2018ஆம் ஆண்டு வரை குறித்த சான்றிதழைப் பெற்றவர்களிற்கு வரவு செலவுத் திட்டத்தில் அனுமதித்த காலமான 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலும் 2019ஆம் ஆண்டில் சான்றிதழ்களைப் பெற்றவர்களிற்கு எந்த மாதம் சான்றிதழ் பெறப்பட்டதோ அந்த மாத்த்தில் குறித்த கொடுப்பனவுகள் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டது.
இவ்வாறு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நம்பி சான்றிதழ்களை சமர்ப்ப்பித்து காத்திருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக அலைச்சலும் கையில் இருந்த பணமும் செலவு ஏற்பட்டமைதான் மிகுதியாகவுள்ளது. எனக் கவலை தெரிவிக்கின்றனர்.