யாழ்பாணம் ,அரியாலை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை மக்கள் துரத்திச் சென்றதால் மணலை வீதியில் பறித்துவிட்டு...

யாழ்பாணம் ,அரியாலை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை மக்கள் துரத்திச் சென்றதால் மணலை வீதியில் பறித்துவிட்டு கடத்தல்காரர்களால் தப்பிச்சென்றனர்.

அரியாலை நெடுங்குளம் சந்தி பகுதியில் சுமார் 300 மீற்றர் வரையான வீதியில் மணல் பரவி கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதனால் யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியூடான போக்குவரத்துக்கு 10 மணித்தியாலத்துக்கு மேல் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மணல் ஏற்றி வைந்த கனகர வாகனம், இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் வயர்கள் மற்றும் தூணையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.
மணல் ஏற்றி வந்த வாகனம் இதுவரை அடயாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


