சஜித் பிரேமதாசவின் அளவிற்கதிகமான பேச்சுத்தான் அவரது தோல்விக்கு காரணம். அவர் நாடாளுமன்றத்திலும் அதிகமாக பேச வேண்டும். அப்படியென்றால்த்தான் நா...
சஜித் பிரேமதாசவின் அளவிற்கதிகமான பேச்சுத்தான் அவரது தோல்விக்கு காரணம். அவர் நாடாளுமன்றத்திலும் அதிகமாக பேச வேண்டும். அப்படியென்றால்த்தான் நாம் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெறலாம் என தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான இரு நாட்கள் விவாதம் இன்று (7) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சி தலைவரின் கன்னியுரை இன்று சபையில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவா என்ற கேள்வி எழுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்க்கட்சி தலைவர்கள் இருவர் உள்ளனர். முதலில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தீர்மானித்து அதன் பின்னர் உரையாட வர வேண்டும்.
சஜித் பிரேமதாசவின் அதிகளவிலான பேச்சே ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே இன்னும் அதிகமாக நீங்கள் பேசுங்கள், அப்போது தான் எமக்கு வாக்கு அதிகரிக்கும்.
இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது. சுமந்திரன் எதிர்க்கட்சி தலைவரா? அனுரகுமார எதிர்க்கட்சி தலைவரா? ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவரா? அல்லது சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவரா என்பது குறித்து முதலில் உங்களிடம் ஒரு கலந்துரையாடலை நடத்தி ஒருவரை நியமியுங்கள்.
இன்று எம்.சி.சி குறித்து, சிங்கபூர் உடன்படிக்கை குறித்து, விலை உயர்வு குறித்து எல்லாம் பேசும் எதிர்க்கட்சி தலைவர் அன்று ஆட்சியில் இருக்கும் போது ஏன் வாய் திறக்கவில்லை. சிங்கபூர் உடன்படிக்கை, எம்.சி.சி உடன்படிக்கை அமைச்சரவைக்கு கொண்டுவந்த நேரம் நீங்கள் அமைச்சரவையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என அப்போதைய ஜனாதிபதி கூறினார்.
இராணுவ தண்டிப்பு குறித்து நடவடிக்கை எடுத்தபோது ஏன் வாய் திறக்கவில்லை. அப்போதெல்லாம் வாய் திறக்காது இன்று நீங்கள் நியாயம் பேச வந்துள்ளீர்கள். உங்களின் ஆட்சிக் காலத்தில் செய்த எதனையும் நாம் செய்ய மாட்டோம்..
கடந்த ஆட்சியில் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தது, அதிகாரிகளை மிரட்டி அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபட்ட குரல் பதிவுகளில் 5 குரல் பதிவுகள் மட்டுமே வெளியில் வந்துள்ளன. இன்னும் 1 இலட்சத்து 21 ஆயிரம் குரல்பதிவுகள் என்னிடம் உள்ளன.
அதனை வெளியிட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் சகல குற்றங்களும் வெளியில் வரும். எமது ஆட்சியாளர்களை விமர்சித்து நீதிமன்ற அவமதிப்பு, சட்ட மீறல்கள் முன்னெடுத்ததாக மக்கள் மத்தியில் கூறியவர்களின் உண்மை முகம் இப்போது வெளியில் வந்துள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயகவும் சேர்ந்து செய்த சதிகள் வெளியில் வந்துள்ளது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, குற்றப் புலனாய்வு பிரிவிடம் இருந்த குரல் பதிவுகள் எவ்வாறு உங்களில் கைகளுக்கு வந்தது? நீங்கள் இவற்றை எவ்வாறு எடுத்தீர்கள்?. அப்படியென்றால் இது சட்டத்தை கையில் எடுத்த செயற்பாடு இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு மஹிந்தானந்த பதிலளிக்க முடியாமல், எதுவும் பேசாமல் உரையை முடித்துக் கொண்டு உட்கார்ந்தார்.