ஊடக சந்திப்பில் பச்சையாக மீனை சாப்பிட்டு மீன் வியாபாரத்திற்கு உதவிய பெருமையை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி திலிப் வெத ஆராச்சிக்கு நேற...
ஊடக சந்திப்பில் பச்சையாக மீனை சாப்பிட்டு மீன் வியாபாரத்திற்கு உதவிய பெருமையை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி திலிப் வெத ஆராச்சிக்கு நேற்று மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அம்பாந்தோட்டை, தாங்காலை மீன் சந்தைக்கு திலிப் வெத ஆராச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தார்.
இதன்போது மீனவர்கள் திரண்டு அவருக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர்.
வரவேற்பின் பின்னர் மீனவர்களுடன் அவர் கலந்துரையாடலையும் நடத்தினார்.