திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவொன்றின் உறுப்பினரான ”ஊருஜுவா” பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். கடுவளை – வதுரமுல்ல பக...
திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவொன்றின் உறுப்பினரான ”ஊருஜுவா” பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
கடுவளை – வதுரமுல்ல பகுதியில் இன்று இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்ட ”ஊருஜுவா”, மேலதிக விசாரணைகளுக்காக வதுரமுல்ல பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட சம்பவமொன்றை அடுத்து, பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
இந்த துப்பாக்கி பிரயோகத்திலேயே ”ஊருஜுவா” உயிரிழந்துள்ளார்.