வெலிபென்னயில் உள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9 மி.மீ ரக 248 தோட்டாக்கள் உட்பட பல்வேறு வகையா...
வெலிபென்னயில் உள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 9 மி.மீ ரக 248 தோட்டாக்கள் உட்பட பல்வேறு வகையான 370 தோட்டாக்களும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4 மெகசின்கள் மற்றும் 1 கைக்குண்டு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் ஆயுதக் கிடங்கிற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் வீட்டிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண புலனாய்வு பிரிவினரால் இன்று (27) பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு ஒன்று இன்றிரவு குறித்த பொலிஸ் பரிசோதகரை படுகொலை செய்து இந்த ஆயுதங்களை கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தெரியவந்ததை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.