வரிக் கொள்கை உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (14) முதல் அனைத்து அலுவலக சேவைக...
வரிக் கொள்கை உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (14) முதல் அனைத்து அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் இருந்து விலகுவதற்கு நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக குறிப்பிட்ட இடங்களில் நீர் விநியோகம் தடைபடும் அபாயம் உள்ளதாக பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில், கட்டணம் வசூலித்தல், பற்றுச்சீட்டு வழங்குதல், புதிய நீர் இணைப்புகள் வழங்குதல் மற்றும் நீர் இணைப்புகளை துண்டித்தல் போன்றவை இடம்பெறாது எனவும், பராமரிப்பு பணிகள் மாத்திரமே இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.