யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்துள்ளமை உண்மையாகவே உள்நோக்கம் கொண்டதாகவே அமைகிறது. அரசின் இத்தகைய செயற்பாடுகள் மாணவர்கள் மத்தியில் தேவைய...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்துள்ளமை உண்மையாகவே உள்நோக்கம் கொண்டதாகவே அமைகிறது. அரசின் இத்தகைய செயற்பாடுகள் மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத பிரச்சனைகளை ஆரம்பிப்பதற்கான முன் முயற்சியாகப்படுகிறது என தெரிவித்திருக்கிறார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
அநாவசியமாக பல்கலைக்கழகத்திற்குள் கொந்தளிப்புக்களை உருவாக்கக் கூடிய நிலைமைகளை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்வது ஆரோக்கியமானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புகைப்படங்களை வைத்து மாணவர்களை கைது செய்வது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றும் ஆகவே புதிய புதிய குழப்பங்களை உருவாக்க அரசாங்கமோ அதன் படைகளோ முயற்சி செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆகவே அமைதியாக இருக்கின்ற வடக்கு மாகாணத்தில் குழப்பங்களை உருவாக்க வேண்டாமென அரசசையும் முப்படைகளையும் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்துள்ள விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை எமது கட்சி சார்பாக எமது கட்சியின் பிரதிச் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சருமான சர்வேஸ்வரன் சென்று பார்வையிட்டிருக்கின்றார்.
நாங்கள் அறிந்த வரையில் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் முதலாவது தமது தேவை கருதி ஏற்கனவே செய்யப்பட்ட பனர் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படம் பொறிக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் ஆகிய இரண்டும் அங்கே இருந்ததாகவே காரணங்கள் கூறப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
நாட்டில் இப்போது இருக்கக் கூடிய பிரச்சனை என்பது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பாகத் தான் நாட்டில் தேடுதல் வேட்டைகள் நடப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அல்லது வடக்கைப் பொறுத்தவரையில் அவர்கள் பல காரணங்களைக் கூறி தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இதற்கு பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதாகவும் அரச தரப்பினர்கள் கூறக்கூடும். இதற்கு நாங்கள் அரசிற்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில், போராளிகள் தொடர்பாகவோ அல்லது மாவீரர்கள் தொடர்பாக வருடாவருடம் அதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றது.
அந்த நிகழ்வுகளில் வடக்கு கிழக்கில் இருப்பவர்கள் மட்டுமல்லாது தெற்கிலிருந்தும் சிங்கள புத்திஜீவிகள் கூட அவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். ஆகவே பிரபாகரனுடைய புகைப்படம் இருப்பது ஒன்றும் பிரச்சனைக்குரிய விடயமல்ல. சகல ஊடகங்களிலும் பிரபாகரனுடைய புகைப்படங்கள் இன்னும் வந்து கொண்டு இருக்கின்றது. சகல அச்சு ஊடகங்களிலும் பிரபாகரனுடைய புகைப்படம் வருகின்றது.
அவ்வாறான புகைப்படம் பல்கலைக்கழக மாணவர் சங்க கட்டிடத்தில் இருக்கக் கூடாதென்பதல்ல. ஆகவே இது உண்மையாகவே ஒரு உள்நோக்கம் கொண்டு மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத பிரச்சனைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு முன் முயற்சியாகத் தான் எங்களுக்குப் படுகின்றது. ஆகவே இது உண்மையாகவே அநாவசியமாக பல்கலைக்கழகத்திற்குள் கொந்தளிப்புக்களை உருவாக்கக் கூடிய ஒரு நிலைமையை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து உருவாக்குவது ஆரோக்கியமான விடயமல்ல.
இந்த சர்வதேச பயங்கரவாதம் என்று சொன்ன விடயம் முக்கியமானதாக இருக்கின்ற பட்சத்தில் இப்பொழுது தமிழ் இளைஞர்களை பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்ய முற்படுவது உண்மையாகவே ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயம். ஆகவே புதிய புதிய குழப்பங்களை உருவாக்க அரசாங்கமோ அல்லது இராணுவமோ, பொலிஸாரோ முயற்சி செய்யக் கூடாது.
ஆகையினால் அரசிற்கும் முப்படைகளுக்கும் மிகத் தெளிவாகக் கூறிக் கொள்வது என்னவெனில் வடக்கு மாகாணம் அமைதியாக இருக்கின்றது. அமைதியான இடத்தில் குழப்பத்தை உருவாக்க தயவு செய்து முயற்சிக்க வேண்டாம். ஆகவே புதிய புதிய குழப்பங்களை நீங்கள் உருவாக்கி மேலும் மேலும் பிரச்சனைகளை வளர்ப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆகவே தயவு செய்த உடனடியாக மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தில் சுமூக சூழல் ஏற்பட வேண்டும். எதிர்வரும் 6 ஆம் திகதியோ அல்லது அதற்குப் பிற்பாடோ பல்கலைக்கழகம் தொடங்குகின்ற பொழுத அங்கெ எந்தவிதமான பிரச்சனைகளும் இருக்கக் கூடாது. ஆகவே அந்த மாணவர்களை விடுவிப்பது புத்திசாலித்தனமானது.
ஒரு அற்பத் தனமான காரணத்தை அதுவும் ஒரு புகைப்படத்தைக் காட்டி நீங்கள் மாணவர்களைக் கைது செய்வதென்பது உண்மையாகவே அருவருக்கத்தக்க செயல். இவ்வாறான புகைப்படம் இலங்கையினுடைய சகல சிங்கள ஆங்கில தமிழ் பத்திரிகைகளில் இந்தப் புகைப்படங்கள் இருக்கின்றன. ஆகையினால் இவற்றைக் காட்டி மாணவர்களைக் கைது செய்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. கண்டிக்கத்தக்கது. ஆகவே தயவு செய்து இவற்றை நிறுத்தி மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.