நீர் நிலைகளை பாதுகாத்தல் நீரின்றி அமையாது உலகு... என்பது வள்ளுவன் வாக்கு. உணவு இல்லாமல் கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆ...
நீர் நிலைகளை பாதுகாத்தல்
நீரின்றி அமையாது உலகு... என்பது வள்ளுவன் வாக்கு. உணவு இல்லாமல் கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. எத்தனை வளமிருந்தாலும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு குறுக்கே நிற்பது தண்ணீர் பிரச்சனைதான். காவிரி, பாலாறு, தென்பெண்ணையாறு என வெளிமாநில நதிகளைத்தான் நீர் ஆதாரத்துக்காக நம்ப வேண்டியிருக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு கிணறுகளில் தண்ணீரை சாதாரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும். மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,
இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆற்றையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கிறது. நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று இப்போது பணம் பண்ணும் தொழிலாகிவிட்டது. நதிகள் ஒன்றாக இணைந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும். அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும். சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகின்றன. ஆனால் எல்லா அரசுகளும் தேர்தல் நேரத்தில் மட்டும் ஒரு வாக்குறுதியாக அளித்து விட்டு ஆட்சிக்கு வந்த பின்னர் ஒதுங்கி விடுகின்றன.
பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை என்பதே உண்மை. மழைக்காலங்களில் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் கவலைப் படுவதில்லை. அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று நீர்வள அமைச்சகத்தின் அறிவிப்பு நம்மை மிரளச்செய்கிறது. உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான்,
இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. நிலத்தடி நீரை நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம். இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாக்க அரசு கடும் சட்டம் இயற்ற வேண்டும். ஏரிகளை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அவற்றை பட்டா போட்டு வீடு கட்டுகிறது, அரசு அலுவலகங்கள், பஸ் நிலையங்கள் கட்டுகிறது. இடப்பற்றாக்குறைக்காக நீர் ஆதாரங்களை கொள்ளையடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நீரை பாதுகாக்கவும், சூழலின் சமன்பாட்டை நிலைத்திருக்கச்செய்வதும் மக்கள் கையில்தான் உள்ளது. நீரை சேமிப்போம், வருங்கால தலைமுறையை பாதுகாப்போம்.
50 ஆண்டுகளுக்கு முன்பு கிணறுகளில் தண்ணீரை சாதாரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும். மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,
இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆற்றையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கிறது. நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று இப்போது பணம் பண்ணும் தொழிலாகிவிட்டது. நதிகள் ஒன்றாக இணைந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும். அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும். சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகின்றன. ஆனால் எல்லா அரசுகளும் தேர்தல் நேரத்தில் மட்டும் ஒரு வாக்குறுதியாக அளித்து விட்டு ஆட்சிக்கு வந்த பின்னர் ஒதுங்கி விடுகின்றன.
பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை என்பதே உண்மை. மழைக்காலங்களில் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் கவலைப் படுவதில்லை. அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று நீர்வள அமைச்சகத்தின் அறிவிப்பு நம்மை மிரளச்செய்கிறது. உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான்,
இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. நிலத்தடி நீரை நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம். இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாக்க அரசு கடும் சட்டம் இயற்ற வேண்டும். ஏரிகளை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அவற்றை பட்டா போட்டு வீடு கட்டுகிறது, அரசு அலுவலகங்கள், பஸ் நிலையங்கள் கட்டுகிறது. இடப்பற்றாக்குறைக்காக நீர் ஆதாரங்களை கொள்ளையடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நீரை பாதுகாக்கவும், சூழலின் சமன்பாட்டை நிலைத்திருக்கச்செய்வதும் மக்கள் கையில்தான் உள்ளது. நீரை சேமிப்போம், வருங்கால தலைமுறையை பாதுகாப்போம்.
நீர் வளம் காப்போம்!
"ஆழி சூழ் உலகு" என்பதற்கேற்ப இவ்வுலகில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மனிதனின் உடலிலும் சுமார் 75% நீர்தான். நம் உணவில் உள்ள சத்துகளை தேவையான உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் கழிவை கழிவு உறுப்புகளுக்கு அனுப்பவும் நீர் அவசியம். அதே போல் நம் சுற்றுப்புறம் தூய்மையுடன் அமையவும் நீர் இன்றியமையாதது.
ஒரு மனிதனின் உடலில் 42லி தண்ணீர் உள்ளது. அதில் 2.7லி என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் டிஹைரேஷன், உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும். நீர் என்னும் அமுதம் பெரும்பாலான பொருட்களின் தயாரிப்பில் மிக முக்கிய மூலப்பொருள். மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதாக இருந்தால் அது தண்ணீருக்காகதான் இருக்கும் என்னும் அளவிற்கு அதன் தேவையோ அதிகம்; கையிருப்போ குறைந்து கொண்டே போகிறது. நம் அன்றாட வாழ்வில் தண்ணீர் எவ்வாறெல்லாம் வீணாகிறது, அதை எவ்வாறு சேமிக்கலாமெனப் பார்ப்போம்.
நீர் சேமிப்புக்கு நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் உங்கள் வாழ்நாளில் சில மணிநேரங்களை அதிகரித்துக் கொள்கிறீர்கள். உணவில்லாமல் ஒரு வாரம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. ஒரு கிராம் தங்கத்தைவிட ஒரு மிடறு தண்ணீரின் மதிப்பு அதிகம் என்பது தாகம் கொண்ட மனிதனுக்குத் தெரியும். நீர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உலகம் வெப்பமயமாவதையும் குறைக்க முடியும்.
நீர் சேமிப்பு முறை என்பது ஏதோ மரம் நடு விழா என்பது போல் வருடத்திற்கு ஒரு சிலநாட்கள் செய்ய வேண்டிய செயல் அல்ல. இன்றைய பெருகிவரும் மக்கள்தொகையில் நீர் சேமிப்பு முறைகளை ஒவ்வொரு விநாடியும் கடைப்பிடிக்க வேண்டிய அவசரத்தில் அனைவருமே உள்ளோம். நீங்கள் இருக்கும் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாவிட்டாலும் நாளைக்கே பற்றாக்குறை வரலாம்.
வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. உங்களின் சிறு கவனமும் சில லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம். சேமிப்பு முறைகளைத் தொகுத்துத் தர நாங்க ரெடி! தொடர்ந்து பின்பற்ற நீங்க ரெடியா?
இல்லத்தில்:
1. சமையலறையிலோ, குளியலறையிலோ தண்ணீர்க் குழாயிலிருந்து நீர் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
2. உங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே தண்ணீரை உபயோகியுங்கள்.
3. மறக்காமல் பயன்படுத்தியதும் குழாயை நிறுத்துங்கள்.
4. குழாயில் நீர்க் கசிவு இருப்பின் பிளம்பரை அழைத்து வந்து உடனே சரி செய்யுங்கள்.
5. கூல் டிரிங்ஸ் தேடி ஓடாமல் உங்களின் குடி தண்ணீரையே குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குடியுங்கள்.
6. உங்களின் நீர் உபயோக பில்லை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் எங்கு, எப்படி தண்ணீர் வீணாகிறது எனக் கண்டறிந்து அதைத் தடுக்க முடியும்.
7. பயன்பாட்டுக்குப் பின்னர் தண்ணீர்க் குழாய்களை நன்கு மூட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
8. தண்ணீர்துப்பாக்கி போன்ற தண்ணீரை வீணாக்கும் பொம்மைகளை உங்கள் குழந்தைகளுக்கு வாங்குவதைத் தவிருங்கள்.
9. மழையின் போது தானியங்கி தண்ணீர் வழங்கும் உங்களின் சாதனத்தை நிறுத்தி வைக்கும் முறைகளை அறிந்து கொள்ளுங்கள்.
10. சுற்றுலா, வெளியூர்ப் பயணம் ஆகியவற்றின் போது மறக்காமல் உங்களின் வாட்டர் ஹீட்டரை நிறுத்தி விட்டுச் செல்லுங்கள்.
11. தண்ணீரைப் பயன்படுத்தாத போது உங்களின் வாட்டர் மீட்டரைப் பாருங்கள். அதன் முள்ளில் அசைவிருந்தால் உங்கள் வீட்டில் நீர்க் கசிவு உள்ளதாக அர்த்தம்.
12. தண்ணீர் பயன்படுத்தாத போது கிணற்றில் உள்ள பம்ப் அவ்வப்போது மேலேறி கீழிறங்கினால் உங்கள் கிணற்றிலும் நீர்கசிவு உள்ளதாக அர்த்தம்.
13. புதிதாக வீடோ, குளியலறையோ அமைக்கும் போது குறைந்த அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் டாய்லெட்டை அமையுங்கள்.
குளியலறையில்:
குளியலறையில்:
1. பல் துலக்கும் போதும், முகச் சவரம் செய்யும் போதும் தண்ணீர்க் குழாயை திறந்து விட்டுச் செய்யாமல் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள்.
2. ஷவரின் துளைகள் சிறிய அளவில் இருக்குமாறு அமைத்துக் குளிக்கும் போது அதிக நீர் செலவாவதைக் கட்டுப்படுத்துங்கள்.
3. டாய்லெட்டில் நீர்கசிவு உள்ளதா என அவ்வப்போது பரிசோதியுங்கள்.
4. தேவையில்லாமல் டாய்லெட்டில் டிஷ்யூ, சிகரெட் போன்றவற்றைப் போட்டுத் தண்ணீரை வெளியேற்றுவதைத் தவிருங்கள்.
5. குற்றால அருவியில் குளிப்பதாய் நினைத்துக் கொண்டு ஷவரில் தண்ணீரை திறந்து விடாமல் குளிப்பதற்குக் குறைந்த அளவு தண்ணீரையே பயன்படுத்துங்கள்.
6. உங்களின் பழைய குளியலறை, டாய்லெட் போன்றவற்றைக் குறைவான நீரை பயன்படுத்தும்படியான புதிய முறைகளில் மாற்றி அமையுங்கள்.
7. டாய்லெட்டின் flapper சரியாக வேலை செய்கிறதா என அடிக்கடி பரிசோதியுங்கள்.
8. குழந்தைகளை உங்களுடனே குளிக்க வைக்கும் போது தண்ணீர் பயன்பாடு குறைக்கப்படும்.
9. நீங்கள் தலைக்குக் குளிக்கும் போது ஷாம்பூ தேய்க்கும் போது ஷவரை மூடிவிடுங்கள்.
10. ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும் போதும், வீடுகளிலும் ஒருமுறை பயன்படுத்திய துண்டுகளைத் துவைக்கப் போடாமல் ஒரு சில முறைகள் பயன்படுத்துங்கள்.
11. ஷவரில் சுடுதண்ணீர் வரும் வரை திறந்துவிடும் தண்ணீரை ஒரு பக்கெட்டில் பிடித்து டாய்லெட்டுக்கும், செடிகளுக்கும் பயன்படுத்துங்கள்.
12. கைகழுவும் போது மடமடவென தண்ணீரை திற்ந்து விட்டு வீணாக்காதீர்கள்.
துணி துவைக்கும் போது:
1. மிகக் குறைந்தளவு தண்ணீரைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் வாஷிங் மெஷினை பயன்படுத்துங்கள்.
2. குழாயைத் திறந்து விட்டுவிட்டு துணிகளை அலசாமல் ஒரு பக்கெட்டில் நீரைப் பிடித்து வைத்து அலசுங்கள்.
3. முழு அளவு துணிகள் சேர்ந்த பின்பே அவற்றை வாஷிங் மெஷினில் துவையுங்கள்.
சமையலறையில்:
1. பாத்திரங்களைத் துலக்கும் போதும் குழாயைத் திறந்துவிட்டு தண்ணீரை வீணாக்காதீர்.
2. பழங்கள், காய்கறிகள் கழுவப் பயன்படுத்திய தண்ணீரை பூந்தொட்டிகள், அலங்கார செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
3. பள்ளிக்கும், அலுவலகத்திற்கும் எடுத்துச் சென்ற தண்ணீர் மீதமிருந்தால் கீழே ஊற்றாமல் செடிகளுக்கு ஊற்றுங்கள்.
4. பாத்திரங்களை கழுவும் போது ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி அதிலிருந்து தண்ணீரை அள்ளி கழுவும் போது குறைவான அளவு நீரே செலவாகும்.
5. முழு அளவு பாத்திரங்களையே எப்போதும் டிஷ்வாஷரில் பயன்படுத்துங்கள்.
6. பதப்படுத்த, குளிர்விக்கப்பட்ட பொருட்களை அறை வெப்பநிலைக்கு கொண்டு வரத் தண்ணீர்க் குழாயில் பிடிக்காமல், மைக்ரோவேவில் சூடேற்றி பயன்படுத்துங்கள்.
7. குழாயைத் திறந்துவிட்டு கழுவுவதற்குப் பதில் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி ஒரே சமயத்தில் பழங்கள், காய்கறிகளை கழுவுங்கள்.
8. உடனடியாக சுடுநீர் தரும் வாட்டர்ஹீட்டரை பயன்படுத்துவதன் மூலம் மின்சக்தியையும், தண்ணீரையும் சேமிக்கலாம்.
9. ஒரு பக்க சிங்கில் சோப்பு நீரை நிரப்பி அதில் பாத்திரங்களை போடுவதன் மூலம் எல்லா பாத்திரத்திலும் குறைவான அளவு சோப்பே படும், அதை கழுவுவதற்க்கும் குறைவான நீரே தேவைப்படும்.
10. ஜஸ்கட்டிகளைத் தெரியாமல் தவறவிட்டுவிட்டால் அவற்றை வீணாக்காமல் செடிகளுக்கு தண்ணீருக்குப் பதில் ஜஸைக் கொடுங்கள்.
11. தொங்கும் பூந்தொட்டிகளுக்கு தண்ணீருக்குப் பதில் ஜஸ் கட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் அதிகமான தண்ணீர் வீணே கீழே கொட்டுவதைத் தவிர்க்கலாம்.
12. தண்ணீர் வரும் குழாய்களுக்குச் சரியான இன்சுலேஷன் பயன்படுத்துவதன் மூலம் சுடுதண்ணீர் வேகமாக வர வழி செய்து, நீர் வீணாவதைத்தடுக்கலாம்
13. மீன் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது தொட்டியிலிருந்த நீரை செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.
வீட்டிற்கு வெளியில்:
13. மீன் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது தொட்டியிலிருந்த நீரை செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.
வீட்டிற்கு வெளியில்:
1. புல்தரைக்கு தேவைப்படும் போது மட்டும் தண்ணீர் பாய்ச்சுங்கள்.
2. கார், வீட்டின் வெளிப்புற நடை பாதையை முதலில் பெருக்கிக் குப்பைகளை அகற்றி விட்டுப் பின் நீர் பயன்படுத்தினால் குறைவான அளவே தண்ணீர் செலவாகும்.
3. மிகப்பெரிய புல்தரைகளுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சுங்கள்.
4 செடிகளுக்குத் தேவையான அளவு நீரை அதிக நாட்கள் இடைவெளியில் தருவதால் வேர் நன்கு வளர்வதுடன், நீரும் மிச்சப்படுத்தப்படும்.
5. ஒரே அளவு நீர் தேவைப்படும் செடிகளை ஒரு குழுவாக அமைப்பதன் மூலம் தண்ணீரைச் சேமிக்கலாம்.
5. தெறிப்பது போன்ற செயற்கை நீர்விழ்ச்சியை விட சலசலத்துக் கொண்டு செல்லும் நீர்விழ்ச்சி குறைந்தளவே நீரை ஆவியாக்கும்.
6. நீரை மறுசுழற்சி செய்யும் கடைகளில் உங்களின் காரை கழுவுங்கள்.
7. உங்கள் வீட்டுப் புல்தரையின் மீது காரை நிறுத்தி கழுவுவதன் மூலம் புல்தரைக்கென தனியே நீர் பாய்ச்ச வேண்டியதில்லை.
8. செடியின் தரையை ஒட்டிய கிளைகளை வெட்டாமல் இருப்பதன் மூலம் நீர் ஆவியாவது தடுக்கப்படும். அட! அதுதாங்க உயிர் மூடாக்குன்னு விவசாயிங்க சொல்றது.
9. நிலம் நீரை உறிஞ்சும் தன்மைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சுங்கள்.
10. வருடத்திற்கு ஒருமுறையாவது புல்தரையை கொத்திவிட்டு களை எடுப்பதன் மூலம் நீர் மேற்பரப்பிலேயே தங்காமல் வேருக்ச் செல்லும்.
11. நிலத்திலிருந்து குறைந்த உயரம் மற்றும் சாய்வுகோணங்களிலேயே சொட்டுநீர், தெளிப்பு நீர்ப் பாசனமுறைகளை செயல்படுத்துங்கள்.
12. நடைபாதை மற்றும் வண்டிகள் செல்வதற்கான பகுதிகளில் தெளிப்புநீர் தெளிக்கப்பட்டு வீணாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
13. உங்களின் வால்வுகள், ஹோஸ் போன்றவற்றில் தனியங்கி ஆன்/ஆப் முறையை அமைப்பதன் மூலம் நாம் கவனிக்காதபோது நீர் வீணாவது தடுக்கப்படும்.
14. குழந்தைகளின் தண்ணீர் பொம்மைகளை புல்தரையின் காய்ந்த பகுதிகளில் போட்டு விளையாட விடுங்கள்.
15. மோட்டார் ஆயில், பெயிண்ட் போன்றவற்றை முறையாக மறுசுழற்சி பகுதிக்கு அப்புறப்படுத்துங்கள்.அவற்றை அப்படியே தரையில் கொட்டுவதன் மூலம் நீர் ஆதாரப் பகுதிகளை மாசுபடுத்துகிறோம்.
16. செடிகளின் இலைகளின் மேல் நீர் ஊற்றாமல் வேரிலிருந்து சற்று தள்ளி ஊற்றுங்கள்.
17. காரைக் கழுவும் போது ஹோஸ் பைப் பயன்படுத்தாமல் ஒரு பக்கெட்டில் நீர் எடுத்து ஸ்பாஞ்சால் துடையுங்கள்.
18. நீர் குறைவாக ஆவியாகும் காலை நேரத்தில் செடிகளுக்கு நீர் பாய்ச்சுங்கள்.
19. சிறிய புற்தரைகளுக்குக் கைகளால் நீரை அள்ளித் தெளியுங்கள்.
நீர் சேமிக்கும் வழிகள்:
நீர் சேமிக்கும் வழிகள்:
1. ஒரு பெரிய பேரல் அல்லது சிறியளவுள்ள குளம் அமைத்து அதன் மேல் சிறு சிறு ஓட்டையுள்ள துணியை விரித்துவிடுங்கள். உங்கள் வீட்டின் மழைநீர் விழும் இடத்தில் இவ்வாறு அமைப்பதால் குப்பைகள் மேலேயே தங்கி நீரை மட்டும் கீழே அனுப்பும். உங்களுக்குப் பயன்பாடாத துணிக்கு இப்படியோர் உபயோகம் இருப்பதுடன் பாலிதீன் கவர் பயன்படுத்தப்படுவதும் குறையும். இவ்வாறு சேமிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட நீரை வண்டிகள் கழுவ, செடிகளுக்கு என பயன்படுத்தலாம்.
2. மேலும் அம்மழை நீரை புதியதாக வாங்கிய மரச்சாமான்களை கழுவப் பயன்படுத்தலாம். மழைநீரில் குளோரின் இல்லாததால் செடியின் வளர்ச்சியைத் தூண்டும். மறக்காமல் மழைநீர்த் தொட்டி அல்லது குளத்தை மூடி வைப்பதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கலாம்.
3. மழைநீர் சேகரிப்பு மற்றும் குறைவான நீர் பயன்பாட்டு முறைகளை உங்களால் முடிந்தளவு நண்பர்கள், உறவினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
4. உங்கள் அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளின் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
5. அருகிலுள்ள நர்சரியில் குறைவான நீர் தேவைப்படும் செடிகளைப் பற்றிக் கேட்டு அவற்றை வளருங்கள். அலங்காரச் செடிகளைவிட துளசி போன்ற மூலிகைச் செடிகளை வளர்ப்பதால் அதிகளவு ஆக்ஸிஜன் வெளியிடப்பட்டு சுற்றுசுழல் பாதுகாக்கப்படும். உங்களின் பத்தடி பால்கனியில் கூட துளசியை வளர்க்க முடியும்.
6. உங்களின் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் பணியின் போது முடிந்தளவு நீர் மற்றும் மின்னாற்றலை சேமிக்கும் வழிமுறைகளை கூறிப் பயன்பெறுங்கள்.
7. உங்கள் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப் பாருங்கள்.
8. விடுமுறையில் உங்கள் அருகிலுள்ள குளம் மற்றும் ஏரிகளை தன்னார்வலர்கள் மூலம் தூர் வாரி ஆழப்படுத்துங்கள். வெட்டுக் குத்து, பழியுணர்ச்சி எனக் காட்டும் குறுந்தொடர்கள், சினிமா போன்றவற்றுக்குச் செலவழிக்கும் நேரத்தில் ஒரு மரக் கன்றை உங்கள் அருகிலுள்ள சாலையில் வைத்து வளருங்கள்.
9. வீட்டிற்கு ஒரு மரம் என்னும் வேதாந்தம் முடிந்து போய் இப்போதுள்ள நிலையில் கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் குறைவான நீர் எடுத்துக் கொள்ளும் துளசி, வேம்பு, குமிழ் போன்றவற்றை வளர்த்து, மழைநீர் ஆதாரத்தைப் பெருக்குங்கள்.
10. ஹோட்டலில் தங்கியிருக்கும் போது, 24 மணி நேர தண்ணீர் வசதி என்பதற்காய் இஷ்டத்திற்கு பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
11. தினமும் ஒரு சில துளிகளாவது தண்ணீரை சேமியுங்கள். சிறுதுளியே பெரும் வெள்ளமாகும் விரைவில்.
நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முறைகள்:
உங்களின் சிறுசெயலும் சுற்றுப்புறத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பாலிதீன் கவர்களால் ஏற்படும் தீமையை சென்னையின் மழைக்காலம் உங்களுக்கு உணர்த்தியிருக்கும். நீர் வடிகால் பகுதிகளில் சேரும் குப்பைகளில் பெரும்பகுதி பாலிதீன் கவர்களே. கடையில் இலவசமாய்த் தருகிறார்கள் என்பதற்காக அவற்றை வாங்கிக் குவித்து மாசு ஏற்படுத்தாதீர்கள். தோளில் மாட்டும் பையை எடுத்துச் சென்றால் அனைத்தையும் ஒரே பையில் கொண்டு வந்துவிடலாம். பருப்பு போன்றவற்றை வாங்கும் போது அவை அடைக்கப்பட்ட கவரைத் திருப்பி அதில் காய்கறிகளை வைத்து குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தலாம். நீங்கள் ஏதேனும் கடை வைத்திருப்பவராய் இருந்தால் வாடிக்கையாளருக்குத் திரும்ப பயன்படுத்தும்படியான பைகளை ஒரு சிறுவிலை வைத்து பாலிதீன் கவர்களுக்குப் பதில் தரலாம்.
1. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பாஸ்பேட் இல்லாத துவைக்கும் சோப்புகள், டாய்லெட் கிளீனரை அதுவும் தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். சோடா உப்பு, எலுமிச்சை, வினிகர் போன்ற இயற்கையான பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்துங்கள்.
2. சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெய், மீதமான கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை சிங்கில் போட்டு தண்ணீரை மாசுபடுத்தாமல் குப்பையில் போடுங்கள்.
3. விஷமுள்ள பொருட்களை சிங்க் மற்றும் நீர் வடிகால் பகுதிகளில் கொட்டாதீர்கள்.
4. ஒரு லிட்டர் கார் ஆயில் 9,500 லிட்டர் நீரை மாசுபடுத்துவதுடன் நீர் மறுசுழற்சி மெஷினையும் பழுதடையச் செய்யும். Hazard waste center-ல் உங்களுக்குத் தேவைப்படாத பெயிண்ட், கார் ஆயில் போன்றவற்றைக் கொடுங்கள்.
5. உங்களுக்குப் பயன்படாத மாத்திரை, டானிக் போன்றவற்றை மருந்துகடைகளில் திரும்பக் கொடுங்கள்.
அதிகப்படியான நீர் பாய்ச்சுதல்:
உங்களின் நிலத்தடி மண் எப்போதும் சிறிதளவு ஈரமாகவும், இலைகள் எளிதாக உடையக் கூடியவகையில் இருந்தாலும் அதிகளவு பூஞ்சை காளான்கள் வளர்ந்தாலும் அதிகப்படியான நீரை நீங்கள் செடிகளுக்குத் தருவதாக அர்த்தம். மேற்சொன்னவற்றைக் கவனித்து சரியான அளவில் நீரை பயன்படுத்துங்கள்.