இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 776 பேருக்கு கொவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வடமாகாணத்தில் 21 பே...
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 776 பேருக்கு கொவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் வடமாகாணத்தில் 21 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .
யாழ் பல்கலைக்கழக கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர், யாழ் நுண்கலைப் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் என மட்டக்களப்பு மற்றும் பதுளையை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னார் நாணாட்டான் HNB உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும் நாணாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 3 பேருக்கும் மற்றும் கிளிநொச்சி காமன்ஸ் பணியாளர்கள் எண்மர் அடங்கலாக 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.