இலங்கையின் கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட கடல் சூழல், பொருளாதார இழப்பிற்கான, இழப்பீட்டுத் தொகையை வழங்...
இலங்கையின் கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட கடல் சூழல், பொருளாதார இழப்பிற்கான, இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு வழங்குமாறு சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த பேரழிவைத் தடுக்கத் தவறியதன் மூலம், அப்போதைய கடலோரப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவும் மற்றொரு தரப்பினரும் அடிப்படை உரிமைகளை மீறியதாகவும், உயர்நீதிமன்றம் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.



