இன்று (28) காலை பொரளை கனத்த சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக, கிரேன் வாகனத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்...
இன்று (28) காலை பொரளை கனத்த சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக, கிரேன் வாகனத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சாரதி மற்றும் கிரேன் வாகனத்தின் உரிமையாளர் நாளை புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வீதி விபத்துடன் தொடர்புடைய கிரேன் வாகன சாரதி மீது நடத்தப்பட்ட வைத்திய பரிசோதனையில் அவர் கஞ்சா பாவித்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் வாகனம் ஒன்று, கனத்த சந்தியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்களுடன் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர் அதுருகிரியவைச் சேர்ந்த 62 வயது நபராவார்.
கிரேன் வாகனத்தின் தடுப்பான் செயலிழந்ததும், சாரதியின் அதிவேக ஓட்டுதலும் விபத்துக்கு முக்கிய காரணங்களாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

.jpeg)

