யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக செயற்பாடு இல்லாது காணப்பட்ட வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் இன்று இரவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...
யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக செயற்பாடு இல்லாது காணப்பட்ட வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் இன்று இரவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 4 இடங்களில் நடத்தப்பட்ட வேவ்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களில் 3 பேர் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கொக்குவில் மேற்கு கேணியடி, வராகி கோவிலடி மற்றும் காந்திஜி போன்ற இடங்களிலேயே குறித்த வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
4 மோட்டார் சைக்கிலில் வந்த 10 ற்கும் மேற்பட்டவர்களினாலேயே இவ்வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பொலிஸாருக்கு தகல் கொடுக்கப்பட்ட போதும், சில மணி நேரங்களில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர் என்றும் அப் பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.