பலாலி விமான நிலையத்துக்கான பாதை தெரியாமல்இ அமைச்சர் மகிந்த அமரவீரவை உலங்குவானூர்தியில் ஏற்றிச் சென்ற விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப...
பலாலி விமான நிலையத்துக்கான பாதை தெரியாமல்இ அமைச்சர் மகிந்த அமரவீரவை உலங்குவானூர்தியில் ஏற்றிச் சென்ற விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுஇ உயர்மட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பட்டத் திருவிழாவில் பங்கேற்கஇ அமைச்சர் மகிந்த அமரவீர தனியார் நிறுவனம் ஒன்றின் உலங்குவானூர்தியில் பலாலிக்குப் புறப்பட்டு வந்தார்.
உலங்குவானூர்தியை விமானி மன்னார் தீவில் தரையிறக்க முயன்ற போதுதான் அவருக்கு பலாலிக்கு செல்லும் வழி தெரியாது என்று தெரிய வந்தது.
இதையடுத்துஇ சுமார் 2 மணிநேரம் அலைக்கழிந்த பின்னர்இ எரிபொருள் தீர்ந்த நிலையில்இ உலங்குவானூர்தி பலாலியில் தரையிறக்கப்பட்டது.
விமானப்படை மறுப்பு
அமைச்சரை ஏற்றிச் சென்றது இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தியே என்று வெளியான செய்திகளை இலங்கை விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன மறுத்துள்ளார்.
"குறிப்பிட்ட நாளில் பலாலிக்கு விமானப்படை விமானங்கள் எதுவும் பயணம் மேற்கொள்ளவில்லை. சிவில் விமானம் ஒன்றே அன்றைய நாள் பலாலிக்கான பயணத்தை மேற்கொண்டது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு விசாரணைக்குழு
அதேவேளைஇ இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்குஇ சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர்இ நிமலசிறி தெரிவித்துள்ளார்.
"விசாரணைகள் நடந்து வரும் நிலையில்இ குறிப்பிட்ட விமானி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதுபொறுப்பற்ற தன்மை மாத்திரமன்றிஇ சரியான விமானப் பயணத் திட்டம் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாமல்இ விமானி ஒருவர் பயணத்தை மேற்கொள்வது சட்டவிரோதமானதும் கூட.
முக்கிய பிரமுகர் என்பதற்காக மாத்திரமன்றிஇ தனியொரு பயணியின் உயிருக்கும்கூட விமானி தீங்கிழைக்கக் கூடாது.
பாதை தெரியாமல் விமானி பயணத்தை மேற்கொள்ள முடியாது. ஏற்றுக் கொள்ள முடியாதது" என்றும் அவர் தெரிவித்தார்.
ஒழுங்குபடுத்தியது யார்?
இதற்கிடையேஇ சகுராய் எவியேசன் என்ற நிறுவனத்தின் உலங்குவானூர்தியிலேயே அமைச்சர் மகிந்த அமரவீர பலாலிக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்றும்இ அந்த விமானத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஒழுங்கு செய்திருந்தனர் என்றும்இ கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.