தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் பயன்படுத்திய போர்கருவி ஒன்று முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த 20...
தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் பயன்படுத்திய போர்கருவி ஒன்று முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் ஆனந்தபுரப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடும் சமர் நடைபெற்றது.
இச் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் தமீழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கிய தளபதிகள் அங்கு நிலை கொண்டிருந்தனர்.
இவ்வாறு நிலை கொண்டிருந்தவர்களை இராணுவத்தினர் முற்றுகையிட்ட போது (பொக்ஸ் அடித்தல்) அதனை உடைத்துக் கொண்டு விடுதலைப் புலிகள் வெளியேறிய கடுமயான நேருக்கு நேரான யுத்தம் அங்கு நடைபெற்றிருந்தது.
இம்முற்றுகை முறியடிப் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட போர் கருவியே கடந்த 8 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.