யாழ்.போதனா வைத்திய சாலையின் ஒன்பதாவது விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையின் கூரை மீது ஏறி ...
யாழ்.போதனா வைத்திய சாலையின் ஒன்பதாவது விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையின் கூரை மீது ஏறி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் வைத்தியசாலையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஏரீஜசி யூ விடுதிக்கு சென்ற கொண்டிருந்த சிற்றூழியர் உடனடியாக விரைந்து செயற்பட்டு கூரை மீது ஏறிய நோயாளியினை சதூரியமாக பிடித்துள்ளார்.
அமிர்தசுபசிற சுஜீவன் என்ற சிற்றூழியரே தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றியவர் ஆவார். இவரின் திறமையான செயற்பாட்டினால் இடமபெற விருந்த உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. 45வயது மதிக்க தக்க நபர் ஒருவர் ஒன்பதாவது விடுதியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்றைதினம்(07) விடுதியில் இருந்து காணாமல் போனதை அடுத்து வைத்தியர்களும் சக ஊழியர்களும் இணைந்து தேட ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியசாலையின் நான்காவது மாடியின் உச்சிக் ஏறிக்கொண்டி நபர், பலம் அற்ற தண்ணீர் பீலியில் தாவி ஏறுவதனை இந்த சிற்றூழியர் அவதானித்துள்ளார். தான் சத்தம் போட்டால் அந்த நபர் பயத்தில் கையினை விட்டால் அநியாய இறப்பு ஏற்படும் கருதி, விரைந்து செயற்பட்டு நோயாளியான தற்கொலை எண்ணம் கொண்டிருந்த நபரை கையினை பிடித்து இழுத்தெடுத்துள்ளார்.
சம்பவ தொடர்பில் அறிந்து வந்த வைத்தியசாலை பணிப்பாளர் குறித்த சிற்றூழியரை பாராட்டியதுடன், குறித்த நோயாளியினை வைத்தியசாலை காவலாளிகளின் கண்காணிப்புடன் கூடிய பாதுகாப்பில் வைத்திருக்கு பணித்திருந்தார்.
பின்னர் உள நல வைத்தியரிடம் காண்பித்து சிகிச்சை வழங்க விடுதி வைத்தியருக்கு ஆலோசணை வழங்கினார். இச் சம்பவத்தினால் இன்று(07) மதியம் வைத்தியசாலையில் ஒரு பரப்புதன்மை காணப்பட்டது.