கடந்தவருடநடுப்பகுதியில் வேலணைபிரதேசசெயலகம் ஊடாக,"கற்றாலைவளர்ப்பு"குறித்தும்,அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தீவகபிரதேசம் எங்கு...
கடந்தவருடநடுப்பகுதியில் வேலணைபிரதேசசெயலகம் ஊடாக,"கற்றாலைவளர்ப்பு"குறித்தும்,அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தீவகபிரதேசம் எங்கும் தெரிவிக்கப்பட்டு,"கற்றாலைவளர்ப்புக்கு"முன்வருவோருக்குதம்மால் முடிந்தஉதவிகள் வழங்கப்படுமெனஅறிவிக்கப்பட்டதுநீங்கள் அறிந்ததே.
இதன் தொடர்ச்சியாக மூன்றுமாதங்களுக்குமுன்னர் புங்குடுதீவில் திருமதிதனபாலன் சுலோசனாம்பிகைஅவர்கள் தமதுகாணியில் "கற்றாலைவளர்ப்பை"முன்னெடுத்து இருந்ததுடன்,வேலணைபிரதேசசெயலகம் ஊடாகமுன்வைத்தகோரிக்கையின் நிமித்தம்,
இன்றையதினம் (09.01.2018) ஊரெழு"நியூ லங்காபார்மில்" இருந்து மூவாயிரம் கற்றாலைக் கன்றுகள்,வேலணைபிரதேசசெயலகர் ஊடாகதிருமதி.த.சுலோசனாம்பிகைஅவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.
மொத்தமாகஒன்பதாயிரம் கற்றாலைக் கன்றுகள் வழங்குவதெனவும்,அதன் முதல்கட்டமாக மூவாயிரம் கற்றாலைக் கன்றுகள் இன்று (09.01.2018) வழங்கிவைக்கப்பட்டதுடன்,மிகுதிகற்றாலைக் கன்றுகள் விரைவில் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.