ரூ.500 கோடி செலவில் திரைப்படமாகிறது ராமாயணம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரூ.500 கோடி செலவில் ‘ராமாயணம்’ திரைப்படமாக தயாராகிறது. தயாரிப்ப...
ரூ.500 கோடி செலவில் திரைப்படமாகிறது ராமாயணம் |
தமிழ், தெலுங்கு, இந்தியில் ரூ.500 கோடி செலவில் ‘ராமாயணம்’ திரைப்படமாக தயாராகிறது. தயாரிப்பாளர்கள் இந்த திரைப்படம் தொடர்பாக உத்தர பிரதேச அரசுடன் நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
தொலைக்காட்சிகளில் மட்டுமே இதுவரை ராமாயணம் பக்தி தொடராக ஒளிபரப்பாகி உள்ளது. தற்பொழுது அல்லு அரவிந்த், நமித் மல்ஹோத்ரா, மது மந்தீனா ஆகிய 3 தயாரிப்பாளர்கள் இணைந்து ரூ.500 கோடியில் ராமாயணத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர்.
3 டி தொழில்நுட்பத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ், தெலுங்கு, இந்தியில் மூன்று பாகங்களாக திரைப்படம் உருவாக உள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ராமாயணம் திரைப்படத்தை தயாரிப்பது தொடர்பாக உத்தரபிரதேச அரசுடன் தயாரிப்பாளர்கள் நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
உத்தர பிரதேச முதன்மைச் செயலாளர் அவினாஷ் குமாரும் தயாரிப்பாளர் மது மந்தீனாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து முதன்மைச் செயலாளர் அவினாஷ் குமார் கூறுகையில், “உத்தரபிரதேசத்தில் ராமாயணம் படப்பிடிப்பை நடத்த மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று தெரிவித்தார்.
ராமாயணம் படத்திற்காக இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளன.