கமல்ஹாசன் நடிகராக அறிமுகமாகி தற்போது அவரது 63-வது வயதில் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 1954-ஆம் ஆண்டு நவம்பர் ...
கமல்ஹாசன் நடிகராக அறிமுகமாகி தற்போது அவரது 63-வது வயதில் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 1954-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் திகதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தார்.
அவரது தாய் ராஜலட்சுமி, ஏவிஎம் செட்டியாரின் மனைவி பார்ப்பதற்காக கமல்ஹாசனுடன் சென்றுள்ளார்.
அப்போது அவரது நடத்தையால் வியந்த எம்.சரவணன், அவர்களது தயாரிப்பான களத்தூர் கண்ணம்மாவில் நடிப்பதற்காக கமலை பரிந்துரைத்தார்.
தொடர்ந்து மலையாள படம் ஒன்றில் ஹீரோ அவதாரம் எடுத்த கமல், பின்னாளில் பல முக்கிய படங்களில் நடித்தார்.
தமது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய கமல், கண் தானம் செய்வதை தமது ரசிகர்களிடம் ஊக்குவித்தார், அவரும் கண் தானம் செய்துள்ளார்.
பல மொழிகளில் பேசும் திறமை படைத்த கமல், 5 மொழிகளில் 70 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
80-களில் இலங்கை மக்களுக்காக அரசியல் ஆதரவு பேரணி ஒன்றை நடத்தி அப்போதே அரசியலும் பேசியுள்ளார் கமல்.