எதிர்வரும் காலங்களில் காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் ஊடாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மைய நகரம...
எதிர்வரும் காலங்களில் காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் ஊடாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மைய நகரமாக காங்கேசன்துறையினை பிரகடனப்படுத்த எண்ணியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஐுன ரணதுங்க தெரிவித்தார்.
எதிர்வருங்காலங்களில் புகையிரத்தில் மட்டும் அல்ல சிறிய கப்பல்கள் மூலமாக எரிபொருட்களை காங்கேசன்துறைக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அதன் ஊடாக அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
காங்கேசன்துறையினை மையமாக வைத்துக்கொண்டு வடமாகாணத்தில் அமைந்துள்ள 05 மாவட்டங்களுக்கும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேநேரம் 7000 மெற்றிக்தொண் எரிபொருளை சேமிப்பதற்கான திட்டத்தினை மேற்கொள்ள உள்ளோம். இங்கு டீசல் 7 மெற்றிக்தொண் தாங்கி மற்றும் பெற்றோல் 7 மெற்றிக்தொண் தாங்கிகள் நிர்மானிப்பதற்காக தீர்மானித்துள்ளதாகவும் இதனால் கூடிய அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய வளத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பெற்றோலிய நிலைய முகவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறியும் நோக்கிலான சந்திப்பு இன்று (17) யாழ் பொதுநூலகத்தில் பெற்றோலிய வளத்துறை திணைக்கள பிராந்திய பணிப்பாளர் சத்திய விஐயரட்ண தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் மாகாண முகவர்கள் ஊடாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்படும் குறைபாடுகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதில் வடபிராந்திய பெற்றோலிய பொதுமுகாமையாளர் என்.சண்முகநாதன், பெற்றோலிய அமைச்சின் அதிகாரிகள், வடமாகாண பெற்றோலிய கூட்டுத்தபானத்தின் முகாமையாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகள், முகவர்கள் எனப்பலர் கலந்துகொண்டுள்ளனர்.