சட்டவிரோமாக இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிங்கப்பூரில் இருந்து குறித்த ச...
சட்டவிரோமாக இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிங்கப்பூரில் இருந்து குறித்த சிகரட் தொகையை கொண்டுவந்துள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 8 இலட்சம் பெறுமதியான 16,000 சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன் 50,000 தண்டப்பணம் விதித்து சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.