பொரள்ள, கொட்டா வீதியில் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவ...
பொரள்ள, கொட்டா வீதியில் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (20) மாலை 6.35 அளவில் இடம்பெற்றுள்ளது.
சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் கார் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.