சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தமிழகத்தில் 6 ...
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழகத்தில் 6 வயது சிறுமி ஹாசினி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியான தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தஷ்வந்த் மதுராந்தகம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார். அதில் சிறுமி ஹாசினியை தஷ்வந்த் கொலை செய்தது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஹாசினியின் தந்தை பாபு வந்துள்ளார்.
அப்போது ஜாமினில் வெளியே வந்திருந்த தஷ்வந்த், இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என்று பாபுவை மிரட்டியுள்ளார்.
இதன் காரணமாக பாபு செங்கல்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8-ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதையடுத்து தஷ்வந்த் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.