பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. பாடசாலை அதிபர் ஒருவர...
பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அந்தப் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின் போது ஹம்பாந்தோட்டை சுஷி தேசிய பாடசாலையின் பெண் அதிபர் உயிரிழந்தார்.
குருணாகல் வாரியபொல, வயம்ப தலைமைத்துவ பயிற்சி முகாமில், பயிற்சி நடவடிக்கையின் போது ஏற்பட்ட திடீர் விபத்தொன்றில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்துவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அந்த அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.