மட்டக்களப்பு – ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சந்திவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பலியாகியுள்ளார். இ...
மட்டக்களப்பு – ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சந்திவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பலியாகியுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் உள்ள உறவினர் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போதே சந்திவெளி பகுதியில் வைத்து இளைஞர் கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தில் ர.சஞ்சய்காந் (26வயது) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இவருடன் பயணித்த நபர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனம் தப்பிச்சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.