நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான...
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பகுதியிலிருந்து ருவான்புர கிராமத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி நேற்று (18) இரவு 10 மணியளவில் ருவான்புர ஹப்புகஸ்தலாவ வீதியில் ருவான்புர பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் ருவான்புர பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ரஞ்சித்குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்தவரும் மதுபோதையில் இருந்ததாகவும், முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.