ராமேஷ்வரத்தில் உள்ள முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். ட...
ராமேஷ்வரத்தில் உள்ள முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.
டுவிட்டரில் தொடர்ந்து அரசியல் கருத்துக்களை கூறி வந்த கமல்ஹாசன் பிப்ரவரி 21-ஆம் திகதி தனிகட்சி தொடங்குவேன் என கூறியிருந்தார்.
அதன்படி இன்று அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை அவர் தொடங்கினார்.
கலாம் வீட்டுக்கு காலை 7.42 மணிக்கு கமல்ஹாசன் வந்த நிலையில், கலாமின் சகோதரர் முத்துமீரான் அவரை வீட்டுக்குள் வரவேற்றார்.
பின்னர் முத்துமீரான் கமலுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரிடம் கமல் ஆசி பெற்றார்.
அரை மணிநேரம் முத்துமீரான் மற்றும் கலாம் உறவினர்களுடன் உரையாடிய கமல் 8.13 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மதுரையில் மாலை நடக்கும் கூட்டத்தில் தமது கட்சி பெயரை கமல் அறிவிக்க உள்ள நிலையில் கட்சியின் பெயர் திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் (திமமுக) என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட் பதிவில்,
பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன். #maiam
— Kamal Haasan (@ikamalhaasan) February 21, 2018