முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீர் விஜயமாக இன்று காலை இந்தியா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 4.30 மணியளவில்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீர் விஜயமாக இன்று காலை இந்தியா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் இந்தியாவின் பெங்களூருக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடன், ஆறு பேர் கொண்டு குழுவினர் சென்றுள்ளதாகவும், மீளவும் இன்றிரவு மகிந்த ராஜபக்ச நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாயினும், திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவே மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.